சினிமா செய்திகள்

'புஷ்பா 2 'படத்தின் தமிழக விநியோகஸ்தர் உரிமையை பெற்ற பிரபல நிறுவனம்

‘புஷ்பா 2 ’ படத்தின் தமிழக விநியோகஸ்தர் உரிமையை ‘கோட்’ பட தயாரிப்பு நிறுவனம் பெற்றுள்ளது.

தினத்தந்தி

சென்னை,

அல்லு அர்ஜுன் நடிப்பில் கடந்த 2021-ம் ஆண்டு வெளியான திரைப்படம் 'புஷ்பா தி ரைஸ்'. இந்த படத்தில் ராஷ்மிகா மந்தனா, சுனில், பகத் பாசில் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரித்த இந்த படத்துக்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்திருந்தார். இந்த படம் அனைத்து மொழி ரசிகர்களிடமும் நல்ல வரவேற்பை பெற்று கிட்டத்தட்ட ரூ.400 கோடி வரை வசூல் செய்து சாதனை படைத்தது.

இதனைத் தொடர்ந்து புஷ்பா-2 படப்பிடிப்பு கடந்த ஒரு வருடமாக நடந்து வருகிறது. நடிகர் பகத் பாசில், ராஷ்மிகா மந்தனா உள்ளிட்ட நடிகர்கள் இதில் நடித்து வருகின்றனர். புஷ்பா-2 படத்தின் 2 பாடல்கள் மற்றும் டீசர் ஆகியவை வெளியாகி மக்கள் இடையே பெரும் வரவேற்பை பெற்றது. படத்தின் 'புஷ்பா புஷ்பா' என்ற முதல் பாடலின் லிரிக் வீடியோவும் வெளியாகி வைரலானது.

வருகிற ஆகஸ்டு மாதம் 15-ந் தேதி புஷ்பா-2 வெளியிட படக்குழு முடிவு செய்திருந்தது. ஆனால் படத்தின் இறுதி கட்டப் பணிகள் இன்னும் முடிவடையவில்லை. இதனால் படம் வெளி வருவதில் தாமதம் ஏற்படும் என கூறப்பட்டது. இந்நிலையில், புஷ்பா படத்தின் இரண்டாம் பாகம் வரும் டிசம்பர் 6ம் தேதி வெளியாகும் என படக்குழு அறிவித்தது.

இந்த படத்தின் தமிழக திரையரங்க விநியோக உரிமையை ஏ.ஜி.எஸ் நிறுவனம் கைப்பற்றியுள்ளது. ஏ.ஜி.எஸ் நிறுவனம் தயாரித்துள்ள 'கோட்' பட தெலுங்கு உரிமையை மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் பெற்றுள்ளது.

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

பதவி விலகும் கேள்விக்கே இடமில்லை; பா.ஜ.க.வுக்கு கர்நாடக மந்திரி பதில்