சினிமா செய்திகள்

மர்ம நபர்கள் மிரட்டல் ரேஸ் 3 படப்பிடிப்பை ரத்து செய்துவிட்டு எஸ்கேப் ஆன சல்மான்கான்

பாலிவுட் சூப்பர் ஸ்டார் சல்மான்கானுக்கு வந்த கொலை மிரட்டலால் ரேஸ் 3 படப்பிடிப்பை ரத்து செய்துவிட்டு அவர் வேகமாக வெளியேறியதாக தகவல் வெளியாகியுள்ளது. #SalmanKhan #bollywood

மும்பை

மும்பையில் சல்மான்கானின் ரேஸ் 3 படப்பிடிப்பு நேற்று நடைபெற்றது. அப்போது மர்மநபர்கள் சிலர் ஆயுதங்களுடன் படப்பிடிப்புத் தளத்திற்குள் தடாலடியாக நுழைந்து சல்மானுக்கு கொலை மிரட்டல் விடுத்துச் சென்றுள்ளனர்.

முன்னதாக ஜோத்பூரில் உள்ள மான்களை வழிபடும் பிஷ்னோய் சமூகத்தைச் சேர்ந்த தாதா சல்மானுக்கு கொலை மிரட்டல் விடுத்திருக்கிறார். அதன் தொடர்ச்சியாக அவரது ஆட்கள் ஆயுதங்களுடன் வந்து மிரட்டியுள்ளதாக தெரிகிறது. இதனால், ரேஸ் 3 படப்பிடிப்பை உடனடியாக ரத்து செய்துவிட்டு சல்மான்கான் அவசரமாக வெளியேறினார்.

இதையடுத்து சல்மான்கானின் வீட்டிற்குபொலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. அவரை அடிக்கடி வெளியே தலைகாட்ட வேண்டாம் என்றும் பொலிசார் எச்சரித்துள்ளனர்.

#blackbuckcase #JacquelineFeranandez #LawrenceBishnoi #Race3 #RameshTaurani #SalmanKhan #bollywood

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...

ஒடிசா: மனைவி மீது அதீத பாசம்; தாயை கொன்ற நபர்