சினிமா செய்திகள்

எனக்கு அதிக சம்பளமா? பிரகாஷ்ராஜ் விளக்கம்

பிரகாஷ்ராஜ் அதிக சம்பளம் கேட்பதாக கிசுகிசுக்கப்பட்டன இதுகுறித்து அவர் அளித்துள்ள பேட்டியில்,

தினத்தந்தி

தமிழ், தெலுங்கு, கன்னட மொழிகளில் பிரபல வில்லன் நடிகராக இருக்கும் பிரகாஷ்ராஜுக்கு தொடர்ந்து படங்கள் குவிகின்றன. இவர் கதாநாயகர்களுக்கு இணையாக சம்பளம் கேட்பதாக கிசுகிசுக்கப்படுகிறது. இதுகுறித்து பிரகாஷ்ராஜ் அளித்துள்ள பேட்டியில்,''ஒரே மாதிரியான கதாபாத்திரங்களில் நடிக்க எனக்கு விருப்பம் இல்லை. ஆனால் நான் நடித்த காஞ்சிவரம், இருவர், மேஜர், பொம்மரில்லு, ஆகாச மந்தா போன்றவற்றில் வாழ்க்கை இருந்தது. நடிப்பு என்பது ஒரு தொழில். அதில் வாழ்வதற்காக பணம் கிடைக்கிறது. கமர்ஷியல் படங்களுக்கு அதிக சம்பளம் வாங்கிக் கொண்டு எனக்கு பிடித்த படங்களுக்கு குறைத்த சம்பளம் வாங்கிக் கொள்வேன். நம்மை சுற்றி மாறிக்கொண்டு இருக்கும் உலகத்தை சினிமாவில் காட்ட முடியாமல்தான் பெரிய நடிகர்கள் படங்கள் கூட தியேட்டரைவிட்டு போய் விடுகின்றன. சூர்யா, விஜய் சேதுபதி, பஹத் பாசில், ய்ஷ், சாய் பல்லவி போன்றோருடன் 30 ஆண்டுகள் அனுபவம் உள்ள நடிகர்கள் கூட போட்டியிட வேண்டி இருக்கிறது. நட்சத்திர அந்தஸ்துக்கான அர்த்தம் தற்போது மாறிவிட்டது. வித்தியாசமான கதாபாத்திரங்களால் ரசிகர்களின் பாராட்டை பெறுபவர் தான் நிற்க முடியும். மக்களிடையே சினிமாவைப் பற்றிய நல்ல புரிதல் உள்ளது" என்றார்.

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்