சினிமா செய்திகள்

'தலைவர் 170' படப்பிடிப்பில் ரஜினிகாந்துடன் அமிதாப் பச்சன் - வைரலாகும் புகைப்படம்..!

'தலைவர் 170' படத்தின் புதிய அப்டேட் வெளியாகி உள்ளது.

சென்னை,

நடிகர் ரஜினிகாந்த் தற்போது 'ஜெய் பீம்' படத்தை இயக்கிய த.செ ஞானவேல் இயக்கத்தில் நடித்து வருகிறார். 'தலைவர் 170' என்று தற்காலிகமாக பெயரிடப்பட்டுள்ள இந்த படத்துக்கு அனிருத் இசையமைக்கிறார். லைகா நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்தில் துஷாரா விஜயன், மஞ்சு வாரியர், ரித்திகா சிங், ராணா டகுபதி, பகத் பாசில், அமிதாப்பச்சன் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர்.

இந்த படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு கொச்சி, நாகர்கோவில், திருநெல்வேலி ஆகிய மாவட்டங்களில் நடைபெற்றது. தொடர்ந்து 2-ம் கட்ட படப்பிடிப்பு மும்பையில் நடைபெற்று வந்தது. இந்த நிலையில் இந்த படத்தின் புதிய அப்டேட் வெளியாகி உள்ளது. அதன்படி ரஜினி மற்றும் அமிதாப்பின் புகைப்படத்தை பகிர்ந்து மும்பை படப்பிடிப்பு நிறைவு பெற்றதாக படக்குழு அறிவித்துள்ளது. இந்த புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...

ஒடிசா: மனைவி மீது அதீத பாசம்; தாயை கொன்ற நபர்