சினிமா செய்திகள்

மும்பையில் பிரபல பாப் பாடகர் ஜஸ்டின் பீபர்

ஜஸ்டின் பீபரின் முதல் சிங்கிள் பாடல் 'ஒன் டைம்' கடந்த 2009-ம் ஆண்டு வெளியானது

தினத்தந்தி

மும்பை,

உலகப்புகழ் பெற்ற பாப் பாடகர் ஜஸ்டின் பீபருக்கு உலகம் முழுவதும் ரசிகர்கள் உள்ளனர். கனடாவைச் சேர்ந்த ஜஸ்டின் பீபரின் முதல் சிங்கிள் பாடல் 'ஒன் டைம்' கடந்த 2009-ம் ஆண்டு வெளியானது. அப்போது அவருக்கு வயது 15. தொடர்ந்து அடுத்த வருடம் அவரது முதல் ஆல்பம் 'மை வேர்ல்டு' வெளியானது.

இதன் பின்னர் வெளியான அவரது அனைத்து ஆல்பம் பாடல்களும் மிகப்பெரிய வெற்றியை பெற்ற நிலையில், இளம் வயதிலேயே ஜஸ்டின் பீபர் சர்வதேச இசைக் கலைஞராக புகழ் பெற்றார்.

இந்நிலையில், வரும் 12-ம் தேதி நடைபெரும் ஆனந்த் அம்பானி - ராதிகா திருமணத்திற்கு முன்பாக இன்று நடைபெரும் சங்கீத் நிகழ்வில் பிரபல பாப் பாடகர் ஜஸ்டின் பீபர் பாடல் கச்சேரி நடத்துகிறார்.

இதற்காக ஜஸ்டின் பீபர் அம்பானியின் மும்பை வீட்டிற்கு வந்திருக்கிறார். இதுதொடர்பான புகைப்படங்கள் சமூகவலைதளங்களில் வைரலாகி வருகின்றன.

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு

மருத்துவ மாணவி தூக்குப்போட்டு தற்கொலை: காரணம் என்ன...? போலீஸ் விசாரணை

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை