சினிமா செய்திகள்

சினிமா வாய்ப்புகளுக்காக அட்ஜஸ்ட்மென்ட்? - மனம் திறந்த நடிகை அனன்யா

'காஸ்டிங் கவுச்' குறித்த கேள்விக்கு நடிகை அனன்யா பதிலளித்தார்.

ஐதராபாத்,

திரைத்துறையில் நிலவும் 'காஸ்டிங் கவுச்' விவகாரம் குறித்து பிரபல தென்னிந்திய நடிகை அனன்யா நாகல்லா தனது சமீபத்திய பேட்டியில் வெளிப்படையாகப் பேசியுள்ளார்.

'மல்லேஷம்', 'வக்கீல் சாப்' , 'தந்த்ரா' , 'பொட்டேல்' மற்றும் 'ஸ்ரீகாகுளம் ஷெர்லாக் ஹோம்ஸ்' போன்ற திரைப்படங்களில் தனது எதார்த்தமான நடிப்பை வெளிப்படுத்தி, தெலுங்கு ரசிகர்களிடையே தனக்கென ஒரு தனி இடத்தைப் பிடித்தவர் நடிகை அனன்யா நாகல்லா.

சமீபத்தில் ஊடகம் ஒன்றுக்கு அவர் அளித்த பேட்டியில், சினிமா உலகம் மற்றும் தனது தனிப்பட்ட திரைப்பயணம் குறித்து பல சுவாரஸ்யமான விஷயங்களைப் பகிர்ந்து கொண்டார். அப்போது, சினிமா துறையில் எப்போதும் பெரும் விவாதப் பொருளாகவும், சர்ச்சையாகவும் இருக்கும் ’அட்ஜஸ்ட்மென்ட்’ குறித்து அவரிடம் கேள்வி எழுப்பப்பட்டது.

இந்த கேள்விக்கு பதிலளித்து அவர் பேசுகையில், "என்னுடைய திரைப்பயணத்தில் இதுவரை எனக்கு அதுபோன்ற எந்தவொரு கசப்பான அல்லது விரும்பத்தகாத அனுபவங்களும் ஏற்பட்டதில்லை."என்று கூறினார்.