சினிமா செய்திகள்

நடிகை ஆண்ட்ரியாவுக்கு கோல்டன் விசா வழங்கி கௌரவித்த ஐக்கிய அரபு அமீரகம்

பாடகியும், நடிகையுமான ஆண்ட்ரியாவுக்கு ஐக்கிய அரபு அமீரகம் கோல்டன் விசா வழங்கி கௌரவித்துள்ளது.

தினத்தந்தி

ஐக்கிய அமீரக அரசின் கலாசாரம் மற்றும் சுற்றுலாத்துறை இந்திய நடிகர் நடிகைகளுக்கு கோல்டன் விசா வழங்கி வருகிறது. இந்த விசாவை பெற்றவர்கள் 10 வருடங்களுக்கு ஐக்கிய அமீரகத்தின் குடிமகன்களாக கருதப்படுவார்கள். நடிகர்கள் சஞ்சய் தத், ஷாருக்கான், மம்முட்டி, மோகன்லால், பிருதிவிராஜ், துல்கர் சல்மான், நடிகைகள் ஊர்வசி ரவுத்தலா, மீரா ஜாஸ்மின், அமலாபால், லட்சுமிராய், காஜல் அகர்வால் ஆகியோர் ஏற்கனவே இந்த விசாவை பெற்றுள்ளனர்.

தமிழ் நடிகர்கள் விஜய்சேதுபதி, பார்த்திபன், நடிகைகள் மீனா, திரிஷா ஆகியோருக்கும் கோல்டன் விசா வழங்கப்பட்டு உள்ளது. இந்த நிலையில் நடிகை ஆண்ட்ரியாவுக்கும் தற்போது கோல்டன் விசா வழங்கப்பட்டு உள்ளது. கோல்டன் விசா பெற்ற புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஆண்ட்ரியா பகிர்ந்துள்ளார். அந்த புகைப்படம் வைரலாகி வருகிறது. அவருக்கு ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

பச்சைக்கிளி முத்துச்சரம் மூலம் நடிகையாக அறிமுகமான ஆண்ட்ரியா தமிழ் பட உலகில் முன்னணி நடிகையாகவும், பாடகியாகவும் இருக்கிறார்.

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு

மருத்துவ மாணவி தூக்குப்போட்டு தற்கொலை: காரணம் என்ன...? போலீஸ் விசாரணை

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு