சினிமா செய்திகள்

சமூக வலைதளங்களில் பரவிய ஆபாச வீடியோவால் அனிகா வருத்தம்

தன்னை ஆபாசமாக சித்தரிக்கும் வகையில் சமூக வலைதளங்களில் வீடியோ பரவியது வருத்தத்தை ஏற்படுத்தியதாக அனிகா கூறியுள்ளார்.

தினத்தந்தி

அஜித்குமாருடன் என்னை அறிந்தால், விஸ்வாசம் படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் அனிகா. தற்போது வளர்ந்துள்ள அவர் சமூக வலைத்தளத்தில் தனது புகைப்படங்களை தொடர்ந்து வெளியிட்டு வருகிறார். அனிகா கதாநாயகியாக நடிக்க முயற்சிப்பதாகவும், இதற்காக கதைகள் கேட்டு வருவதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. இந்த நிலையில் அனிகா அரைகுறை உடையில் ஆபாசமாக நடனம் ஆடுவதுபோன்ற வீடியோ வலைத்தளத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. அந்த வீடியோவை பார்த்தவர்கள் அனிகாவை விமர்சித்து கருத்துகள் பதிவிட்டனர். இது அவருக்கு வருத்தத்தை ஏற்படுத்தி உள்ளது.

ஆபாச வீடியோவுக்கு விளக்கம் அளித்து அனிகா கூறும்போது, கருப்பு உடையில் நான் ஆடுவதுபோன்ற வீடியோ வலைத்தளத்தில் வந்துள்ளது. அந்த வீடியோவில் இருப்பது நான் அல்ல. மார்பிங் செய்து வெளியிட்டு உள்ளனர். நிஜத்தில் என்னை பார்ப்பதுபோலவே அதை மார்பிங் செய்துள்ளனர். அது பார்ப்பதற்கு தகுதியான வீடியோ இல்லை. எல்லை மீறும் வகையில் உள்ளது. எனவே அந்த வீடியோவை இணைய தளத்தில் இருந்து நீக்க நடவடிக்கை எடுத்து இருக்கிறோம்'' என்றார்.

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து

ஜன.30-ல் மேற்கு வங்காளம் செல்கிறார் அமித்ஷா

2047-ம் ஆண்டிற்குள் இந்தியாவில் 400 விமான நிலையங்கள்: பிரதமர் மோடி

7 முறை எம்.எல்.ஏ... அஜித் பவாரின் குடும்ப, அரசியல் வாழ்க்கை விவரம் வெளியீடு

காரைக்காலில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை