சினிமா செய்திகள்

அனிருத் தரும் ஆச்சரியம்

இசை மீதான தனக்குள்ள காதல் காரணமாக பிற இசையமைப்பாளர்களின் இசையில் பாடல்கள் பாடும் போது சம்பளம் வாங்குவதில்லை என அனிருத் தெரிவித்துள்ளார்.

தினத்தந்தி

தனுஷ் நடித்த '3' படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானவர் அனிருத். ரஜினிகாந்த், கமல்ஹாசன், விஜய், அஜித் என முன்னணி கதாநாயகர்களின் படங்களுக்கு இசையமைத்துள்ளார். கடந்த 10 ஆண்டுகளில் ஏராளமான சூப்பர் ஹிட் பாடல்களை கொடுத்துள்ளார்.

இசையமைப்பாளராக மட்டுமில்லாமல் மற்ற இசையமைப்பாளர்களின் இசையில் உருவான பாடல்களையும் பாடியுள்ளார். அந்த வகையில் ஏ.ஆர்.ரகுமான், யுவன் சங்கர் ராஜா, டி.இமான், சந்தோஷ் நாராயணன் உள்பட பல இசையமைப்பாளர்களின் இசையில் 100-க்கும் மேற்பட்ட பாடல்களை பாடியிருக்கிறார்.

ஆனால் இந்த பாடல்களுக்கு அவர் இதுவரை சம்பளம் வாங்கியதே கிடையாதாம். இசை மீதான தனக்குள்ள காதல் காரணமாக பிற இசையமைப்பாளர்களின் இசையில் பாடல்கள் பாடும் போது சம்பளம் வாங்குவதில்லை என அனிருத் தெரிவித்துள்ளார்.

அனிருத்தின் இந்த செயல்பாடு அனைவருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தி வருகிறது.

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு