சென்னை,
நடிகை அனிஷ்மா அனில்குமார், தற்போது நடித்துள்ள 'மொத ராத்திரி' திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது.
தமிழ் மற்றும் மலையாள திரையுலகில் கவனம் ஈர்த்து வரும் நடிகை அனிஷ்மா. கடந்த 2023-ல் வெளியான மலையாள திரைப்படமான 'பூவன்' மூலம் திரையுலகில் அறிமுகமான இவர், தமிழில் சமீபத்தில் வெளியான 'சிறை' மற்றும் 'யூத்' படங்களின் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார்.
தற்போது, மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகி வரும் 'மொத ராத்திரி' படத்தில் கதாநாயகியாக நடித்து வருகிறார். 'குட் பேட் அக்லி', 'டியூட்' ஆகிய படங்களை தொடர்ந்து, மைத்ரி நிறுவனம் தயாரிக்கும் மூன்றாவது தமிழ் திரைப்படம் இதுவாகும். இந்தப் படத்தில் ரிஷிகாந்த் மற்றும் அனிஷ்மா அனில்குமார் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர்.
இந்நிலையில், அனிஷ்மாவின் பிறந்தநாளை முன்னிட்டு பர்ஸ்ட் லுக் போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது. நேற்று வெளியான இந்த போஸ்டர் சமூக வலைதளங்களில் வைரலாகி, ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறது.