சினிமா செய்திகள்

அஞ்சலியின் 50-வது படம்

ராம் இயக்கிய கற்றது தமிழ் படம் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் அஞ்சலி. 2007-ல் வெளியான இந்த படத்தில் ஜீவா நாயகனாக நடித்து இருந்தார். அங்காடித்தெரு படம் அஞ்சலிக்கு திருப்புமுனையாக அமைந்தது. இந்த படம் வெற்றிகரமாக ஓடி நல்ல வசூல் பார்த்தது.

எங்கேயும் எப்போதும், கலகலப்பு, மங்காத்தா படங்களிலும் அஞ்சலியின் நடிப்பு பேசப்பட்டது. ரெட்ட சுழி, தூங்காநகரம், அரவான், சேட்டை, பலுபு, சகலகலா வல்லவன், மாப்ள சிங்கம், இறைவி, நாடோடிகள் 2 என்று நிறைய படங்களில் நடித்துள்ளார். தெலுங்கு, மலையாள, கன்னட மொழி படங்களிலும் நடித்து இருக்கிறார்.

சினிமாவில் அறிமுகமாகி இதுவரை 49 படங்களில் நடித்து முடித்துள்ள அஞ்சலி தற்போது 50-வது படத்தில் நடிக்க ஒப்பந்தமாகி இருப்பதாக அறிவிக்கப்பட்டு உள்ளது. இந்த படம் குறித்து விவரங்கள் வெளியாக இருக்கிறது. இதையடுத்து அஞ்சலிக்கு வலைத்தளத்தில் ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள்.

விமான விபத்துக்கு முன்... பாதுகாப்பு அதிகாரியுடன் அஜித் பவார் அமர்ந்து இருக்கும் அரிய புகைப்படம் வெளியீடு

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்