சினிமா செய்திகள்

“அண்ணாத்த” பட நடிகை தேர்தலில் போட்டி

மலையாள நடிகை அஞ்சலி நாயர் பாஜக சார்பில் கேரள சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிடுகிறார்.

மலையாளத்தில் குணச்சித்திர நடிகையாக கவனம் பெற்றவர் நடிகை அஞ்சலி நாயர். குழந்தை நட்சத்திரமாக திரைத்துறைக்கு அறிமுகமானவர் 80 மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். ‘திரிஷ்யம் 2’ திரைப்படத்தில் காவல்துறை அதிகாரியாக சில காட்சிகளில் நடித்து கவனம் ஈர்த்திருந்தார்.

தமிழில் ‘நெடுநெல் வாடை’ படம் மூலம் அறிமுகமான அஞ்சலி நாயர், ‘டாணாக்காரன்’, ‘எண்ணித்துணிக’, ‘காலங்களில் அவள் வசந்தம்’, ‘ஒன்ஸ் அபான் எ டைம் இன் மெட்ராஸ்’ படகளில் நடித்துள்ளார். ‘அண்ணாத்த’ திரைப்படத்தில் நடிகர் ரஜினிகாந்த்துக்கு அம்மாவாக நடித்துள்ளார். நடிகர் சித்தார்த்துடன் ‘சித்தா’ திரைப்படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து அசத்தினார். அப்படத்திற்காக நல்ல பாராட்டுகளுக்கும் அவருக்கு கிடைத்தது.

இந்த நிலையில், ‘டிவெண்டி 20’ என்கிற கட்சியைச் சேர்ந்த அஞ்சலி நாயர் திருப்பணித்துறா வேட்பாளராக பாஜக கூட்டணியில் இணைந்து போட்டியிடுகிறார். இதே கட்சியைச் சார்ந்த லட்சுமி பிரியா, வீணா நாயர் ஆகிய நடிகைகளும் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர்.

கேரளத்தில் வருகிற ஏப்ரல் 9ம் தேதி நடைபெறவுள்ள சட்டப்பேரவைத் தேர்தலுக்காக பாஜகவின் தேசிய ஜனநாயகக் கூட்டணி ‘டிவெண்டி 20’ கட்சிக்கு 20 இடங்களை ஒதுக்கியிருக்கிறது.