சினிமா செய்திகள்

ரஜினியின் 'அண்ணாத்த' 13 நாளில் ரூ.225 கோடி வசூலை தாண்டி சாதனை

ரஜினிகாந்தின் அண்ணாத்த படம் 13 நாட்களில் உலகம் முழுவதும் ரூ.225 கோடி வசூலித்துள்ளது.

தினத்தந்தி

சென்னை

ரஜினி நடிப்பில் கால் நூற்றாண்டுக்குப் பிறகு தீபாவளி தினத்தில் வெளியான திரைப்படம் அண்ணாத்த. சிவா - ரஜினி கூட்டணி முதல் முறையாக இணைந்திருக்கும் திரைப்படம் என பல எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் அண்ணாத்த திரைப்படம் 4 ந்தேதி திரைக்கு வந்தது.

விஸ்வாசம் படத்திற்கு பின் டைரக்டர் சிறுத்தை சிவா தற்போது ஜினி நடிக்கும் அண்ணாத்த படத்தை இயக்கியுள்ளார். ரஜினியுடன் நயன்தாரா, கீத்தி சுரேஷ், பிரகாஷ் ராஜ், குஷ்பு, மீனா, சூரி, சதீஷ் போன்றோர் நடித்துள்ளார்கள். வெற்றி ஒளிப்பதிவு செய்துள்ள இந்தத் திரைப்படத்திற்கு இமான் இசையமைத்து உள்ளார்.

அண்ணாத்த உலகம் முழுவதும் 3000-க்கும் அதிகமான திரையரங்குகளில் வெளியாகி உள்ளது. குறிப்பாக வெளிநாடுகளில் மட்டும் 1100 திரையரங்குகளில் வெளியாகி தமிழில் புதிய சாதனையை நிகழ்த்தி உள்ளது. தமிழகத்தில் அதிகாலை சிறப்பு காட்சிகளுடன் கோலாகலமாக திரைக்கு வந்தது. அண்ணாத்த கலவையான விமர்சனங்களை பெற்றுள்ளது.

இன்றுவரை ரஜினிகாந்த் நடித்த 2.0 படமே தமிழ் சினிமாவில் அதிகம் வசூல் செய்த திரைப்படமாகும்.

அண்ணாத்த படம் 13 நாட்களில் உலகம் முழுவதும் ரூ.225 கோடி வசூலித்துள்ளது.

பாக்ஸ் ஆபிஸ் முதல் வாரம் ரூ.202.47 கோடி வசூல் செய்தது.

வாரம் 2

நாள் 1 - ரூ.4.05 கோடி,

நாள் 2 - ரூ.4.90 கோடி,

நாள் 3 - ரூ.6.21 கோடி,

நாள் 4 - ரூ.7.14 கோடி,

நாள் 5 - ரூ.1.02 கோடி,

மொத்தம்225.79 கோடி வசூல் செய்து உள்ளது.

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்