சினிமா செய்திகள்

அனுபமாவின் “லாக்டவுன்” ரிலீஸ் மீண்டும் ஒத்திவைப்பு

ஏஆர் ஜீவா இயக்கத்தில் அனுபமா நடித்த ‘லாக் டவுன்’ படத்தின் ரிலீஸ் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

தினத்தந்தி

சென்னை,

லைகா நிறுவனம் சார்பில் சுபாஸ்கரன் தயாரித்துள்ள லாக் டவுன் திரைப்படத்தில் நடிகை அனுபமா பரமேஸ்வரன் நடித்துள்ளார். இந்த படத்தை இயக்குனர் ஏஆர் ஜீவா இயக்கியுள்ளார். இந்த படத்தில் சார்லி, நிரோஷா, பிரியா வெங்கட், லிவிங்ஸ்டன், இந்துமதி, ராஜ்குமார், ஷாம்ஜி, லொள்ளு சபா மாறன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இந்த படத்துக்கு என்ஆர் ரகுநந்தன் மற்றும் சித்தார்த் விபின் இசையமைத்துள்ளனர். கே.ஏ. சக்திவேல் ஒளிப்பதிவு செய்துள்ளார். இப்படத்தின் டீசர், பாடல்கள் ஆகியவை சமீபத்தில் வெளியாகி கவனம் பெற்றது. 

இந்த நிலையில், லாக் டவுன் திரைப்படம் மீண்டும் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக லைகா நிறுவனம் அறிவித்துள்ளது. ஒரு ஆண்டுக்கு மேலாக ரிலீஸுக்காக காத்திருந்த இப்படம் டிசம்பர் 5ம் தேதி திரைக்கு வருமென அறிவிக்கப்பட்டு பின், டிசம்பர் 12 அன்று வெளியாகும் எனக் கூறப்பட்டது குறிப்பிடத்தக்கது.

ஈரானை தாக்கும் அளவுக்கு அமெரிக்காவிடம் வலிமை இல்லை; அதனாலேயே... மத்திய கிழக்கு நிபுணர் பேட்டி

மராட்டியம் அர்ப்பணிப்புள்ள ஒரு தலைவரை இழந்து விட்டது: அஜித் பவார் மறைவுக்கு தெண்டுல்கர் இரங்கல்

தமிழகம் உள்பட 5 மாநில சட்டசபை தேர்தல்: 4ம் தேதி தேர்தல் ஆணையம் ஆலோசனை

நாடாளுமன்றத்தில் ஜனாதிபதி ஆற்றிய உரை வளர்ச்சிக்கான பார்வை கொண்டது: துணை ஜனாதிபதி

அஜித் பவார் மரணம்; சரத் பவாரை தொடர்பு கொண்டு இரங்கல் தெரிவித்த பிரதமர் மோடி