இந்த மோசடிகளை மிஞ்சும் வகையில் ஓ.டி.டி. தளத்தில் வெளியாவதற்கு 4 நாட்களுக்கு முன்பே மிமி' என்ற இந்தி படம் முழுவதுமாக திருட்டு இணையதளத்தில் வெளியாகி திரையுலகினரை அதிர வைத்துள்ளது. இந்த படத்துக்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ளார். பங்கஜ் திரிபாதி, கிரிதி சனோன் ஆகியோர் நடித்துள்ளனர். லட்சுமண் உடேகர் இயக்கி உள்ளார். வருகிற 30-ந் தேதி ஓ.டி.டி. தளத்தில் வெளியாகும் என்று அறிவித்த நிலையில் தற்போது படம் இணையதளத்தில் கசிந்துள்ளது. இதனால் வேறு வழியின்றி உடனடியாக ஓ.டி.டி.யில் படத்தை ரிலீஸ் செய்து விட்டனர்.