சினிமா செய்திகள்

24 மணி நேரத்தில் 2.5 கோடி பார்வையாளர்களை கடந்து 'அரபிக் குத்து'பாடல் சாதனை..!

'அரபிக் குத்து' பாடல் வெளியான 24 மணி நேரத்தில் 2.5 கோடி பாரவையாளர்களை கடந்து சாதனை படைத்துள்ளது

சென்னை, 

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான விஜய் தற்போது இயக்குனர் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் பீஸ்ட் படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடிகை பூஜா ஹெக்டே நடிக்கிறார். மேலும், யோகி பாபு, செல்வராகவன் உள்ளிட்ட திரை பிரபலங்கள் பலரும் நடித்துள்ளனர்.

அனிருத் இசையமைக்கும் இப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. பீஸ்ட் படத்தின் படப்பிடிப்பை நிறைவு செய்த படக்குழு தற்போது டப்பிங் பணியில் தீவிரம் காட்டி வருகிறது. இப்படம் வரும் ஏப்ரல் மாதம் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

இந்நிலையில்  நேற்று பர்ஸ்ட் சிங்கிள் பாடலை படக்குழு வெளியிட்டுள்ளது. இப்பாடலை சிவகார்த்திகேயன் வரிகளில் அனிருத் மற்றும் ஜொனிதா காந்தி இருவரும் இணைந்து பாடியுள்ளனர். விஜய்க்கே உரித்தான ஸ்டைலிஷான லுக் பலரின் கவனத்தை ஈர்த்துள்ளது. 

இந்நிலையில் விஜய் நடித்துள்ள பீஸ்ட் திரைபடத்தின் ஹலமதி ஹபி என தொடங்கும் அரபிக் குத்து  பாடல் வெளியான 24 மணி நேரத்தில் 2.5 கோடி பார்வையாளர்களையும்  , 2.2 மில்லியன் லைக்குகளை பெற்று சாதனை படைத்துள்ளது.

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பிப்ரவரி 4-ல் பிரதமர் மோடி பதில் உரை

விமான விபத்துக்கு முன்... பாதுகாப்பு அதிகாரியுடன் அஜித் பவார் அமர்ந்து இருக்கும் அரிய புகைப்படம் வெளியீடு

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு