மும்பை,
‘சிஐடி’ தொடரில் பிணமாக நடித்த அனுபவத்தை நடிகை அர்ச்சனா கவுதம் பகிர்ந்துள்ளார்.
பிரபல நடிகை அர்ச்சனா கவுதம். இவர் தனது திரைப்பயணத்தின் ஆரம்ப காலத்தில் சந்தித்த சவால்கள் குறித்து மனம் திறந்து பேசியுள்ளார்.
இதுகுறித்து அர்ச்சனா கவுதம் கூறுகையில், “திரையுலகில் எல்லாமே மிகவும் எளிது, ஒரே இரவில் வாய்ப்புகள் கிடைத்துவிடும் என்று பலர் நினைக்கிறார்கள். ஆனால் அது உண்மையல்ல. நான் கடந்து வந்த போராட்டங்கள் பலருக்கு தெரியாது” என்றார்.
தனது ஆரம்ப கால அனுபவத்தை நினைவு கூர்ந்த அவர், “நான் நடித்த மூன்றாவது சீரியல் ‘சிஐடி’. அதில் எனக்கு ஒரு பிணமாக நடிக்கும் கதாபாத்திரம் கிடைத்தது. அதற்காக ஒரு நாளைக்கு ரூ.3,000 சம்பளம் வாங்கினேன்” என்று தெரிவித்தார்.
மேலும், “பிணமாக நடித்து எனக்கு பழக்கம் இல்லாததால், அது மிகவும் வித்தியாசமான அனுபவமாக இருந்தது. இதுபோன்ற பல சிறிய வேடங்களில் நடித்துள்ளேன்” என்றும் கூறினார்.