சினிமா செய்திகள்

தீபாவளிக்கு என் படம் வர என்ன தகுதி இருக்கு என கேட்பதா? ஹரிஷ் கல்யாண் ஆதங்கம்

ஹரிஷ் கல்யாண் நடித்துள்ள "டீசல்" படம் தீபாவளி பண்டியை முன்னிட்டு வெளியாக உள்ளது.

தினத்தந்தி

சென்னை,

சண்முகம் முத்துசாமி இயக்கத்தில் ஹரிஷ் கல்யாண், அதுல்யா ரவி நடிப்பில் டீசல்' படம் தயாராகி இருக்கிறது. தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வருகிற 17-ந்தேதி படம் திரைக்கு வருகிறது.

இதற்கிடையில் படத்தின் ரிலீஸ் குறித்து வெளியாகும் பேச்சுக்கு ஹரிஷ் கல்யாண் ஆதங்கம் தெரிவித்துள்ளார்.அவர் கூறும்போது, என் சினிமா பயணத்தில் நான் நடித்த படம் தீபாவளிக்கு களமிறங்குவது இது முதல்முறை. இது மகிழ்ச்சி அளித்தாலும், சில விமர்சனங்கள் மனதை காயப்படுத்துகின்றன.

என் தயாரிப்பாளர்களிடம், இந்த படம் தீபாவளிக்கு வர என்ன தகுதி இருக்கிறது? பெரிய ஹீரோ, பெரிய டைரக்டர் இல்லையே...' என்றெல்லாம் கேட்டு இருக்கிறார்கள். ஒரு படம் தீபாவளிக்கு ரிலீஸ் ஆக என்ன தகுதி வேண்டும்? என்று எனக்கு தெரியவில்லை. ஒரு படத்துக்கு நல்ல கதை, நல்ல ஆட்கள் இருந்தால் போதாதா? அந்த நம்பிக்கையுடன் களமிறங்குகிறோம். மற்றவை அனைத்தும் ரசிகர்கள் கையில் தான்'', என்று குறிப்பிட்டு உள்ளார்.

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து