சினிமா செய்திகள்

அர்ஜுன் தாஸ் நடித்துள்ள 'ரசவாதி' படத்தின் டிரைலர் வெளியானது

இயக்குனர் சாந்தகுமார் இயக்கத்தில் அர்ஜுன் தாஸ் நடித்துள்ள திரைப்படம் 'ரசவாதி'.

தினத்தந்தி

சென்னை,

மௌனகுரு, மகாமுனி உள்ளிட்ட படங்களை இயக்கி கவனம் பெற்ற இயக்குனர் சாந்தகுமார். இவர் தற்போது 'ரசவாதி' என்ற திரைப்படத்தை இயக்கியுள்ளார். இந்த படத்தில் நடிகர் அர்ஜுன் தாஸ் கதாநாயகனாக நடித்துள்ளார். கதாநாயகியாக தான்யா ரவிச்சந்திரன் நடித்துள்ளார். மேலும் இந்த படத்தில் ரம்யா சுப்ரமணியன், ஜி.எம்.சுந்தர், சுஜித் சங்கர், ரேஷ்மா வெங்கடேஷ், ரிஷிகாந்த் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

தமன் இசையமைத்துள்ள இந்த படத்துக்கு சிவா ஒளிப்பதிவு செய்துள்ளார். இந்த படத்தின் டீசர் கடந்த ஜனவரி மாதம் வெளியாகி கவனம் பெற்றது.

இந்நிலையில், இந்த படத்தின் டிரைலர் இன்று மாலை 5 மணிக்கு வெளியாகும் என படக்குழு தெரிவித்திருந்தது. மேலும் அந்த டிரைலரை திரைத்துறை பிரபலங்கள் லோகேஷ் கனகராஜ், அனிருத், கார்த்தி, கார்த்திக் சுப்பராஜ், துல்கர் சல்மான், எஸ்.ஆர் பிரபு ஆகியோர் தங்கள் எக்ஸ் பக்கத்தில் வெளியிடவுள்ளனர் என்றும் தெரிவித்திருந்தது.

அதன்படி இப்படத்தின் டிரைலரை திரைத்துறை பிரபலங்கள் தங்கள் எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ளனர். இந்த டிரைலர் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்