சினிமா செய்திகள்

அர்ஜுன் நடித்த "தீயவர் குலை நடுங்க" படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு

இப்படத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ் முன்னணி கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார்.

தினத்தந்தி

சென்னை,

அறிமுக இயக்குனர் தினேஷ் லட்சுமணன் இயக்கத்தில் ஆக்ஷன் கிங் அர்ஜுன் நடித்துள்ள படம் தீயவர் குலை நடுங்க. இப்படத்தை ஜி.எஸ்.ஆர்ட்ஸ் எனும் பட நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் ஜி. அருள்குமார் தயாரித்துள்ளார்.

இப்படத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ் முன்னணி கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார். மேலும் இதில் ஜிகே ரெட்டி, லோகு, பிக் பாஸ் அபிராமி, ராம்குமார், தங்கதுரை மற்றும் பலர் நடித்துள்ளனர்.

இந்த படத்தின் படப்பிடிப்புகள் முழுவதும் நிறைவடைந்த நிலையில், படத்தின் ரிலீசை எதிர்பார்த்து காத்து கொண்டிருந்த நிலையில், தற்போது ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது அதன்படி, தீயவர் குலை நடுங்க படம் வரும் நவம்பர் 21ம் தேதி உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து