சினிமா செய்திகள்

“ரெட்ட தல” படத்தில் தனுஷ் பாடியுள்ள பர்ஸ்ட் சிங்கிள் புரோமோ வெளியீடு

அருண் விஜய்யின்‘ரெட்ட தல’ படத்தில் தனுஷ் பாடியுள்ள கண்ணம்மா பாடல் 19ம் தேதி வெளியாகிறது.

தினத்தந்தி

சென்னை,

தமிழ் சினிமாவில் குறிப்பிடத்தக்க நடிகர்களில் ஒருவர் அருண் விஜய். இவர் தற்போது கிரிஷ் திருக்குமரன் இயக்கத்தில் ரெட்ட தல என்ற படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த படத்தில் அருண் விஜய் இரட்டை வேடங்களில் நடிக்கிறார். இப்படத்தில் தான்யா ரவிச்சந்திரன், சித்தி இத்னானி உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். பிடிஜி யுனிவர்சல் நிறுவனம் தயாரிக்க சாம்.சி.எஸ் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.

இந்த படத்தில் அருண் விஜய் வித்தியாசமான கதாபாத்திரங்களில் நடித்திருப்பதாகவும், ரெட்ட தல படம் அடுத்தடுத்த திருப்பங்களுடன் உருவாகியுள்ளதாக கூறப்படுகிறது. ஏற்கனவே இந்த படத்தின் படப்பிடிப்பு பணிகள் முழுவதும் நிறைவடைந்த நிலையில் படத்தின் ரிலீஸ் தேதி இன்னும் அறிவிக்கப்படாமல் உள்ளது.

இந்த நிலையில், ரெட்ட தல படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் புரோமோவை படக்குழு வெளியிட்டுள்ளது. படத்தின் கண்ணம்மா பாடலை தனுஷ் பாடியுள்ளார். பாடல் வரும் 19ம் தேதி வெளியாகிறது.

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்