சினிமா செய்திகள்

'விருமன்' இயக்குனருடன் இணைந்த ஆர்யா - ஜி.வி.பிரகாஷ் பகிர்ந்த போஸ்டர்

நடிகர் ஆர்யா நடிக்கும் 34-வது திரைப்படத்தை இயக்குனர் முத்தையா இயக்க உள்ளார்.

தினத்தந்தி

சென்னை,

'டெடி' மற்றும் 'சார்ப்பட்டா பரம்பரை' திரைப்படங்களின் வெற்றியைத் தொடர்ந்து, நடிகர் ஆர்யா நடித்த திரைப்படம் 'கேப்டன்'. இயக்குனர் சக்தி சவுந்தர் ராஜன் இயக்கத்தில் உருவான இந்த திரைப்படம் சமீபத்தில் வெளியானது.

இந்த நிலையில் நடிகர் ஆர்யாவின் 34-வது படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி இந்த படத்தை குட்டிபுலி, கொம்பன், மருது, விருமன் உள்ளிட்ட படங்களை இயக்கிய இயக்குனர் முத்தையா இயக்கவுள்ளார். மேலும் இந்த படத்திற்கு இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைக்கவுள்ளார்.

ஜீ ஸ்டுடியோஸ் மற்றும் டிரம்ஸ்டிக் புரொடக்சன்ஸ் இணைந்து தயாரிக்கும் இந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்கியுள்ளது. இதுகுறித்த அறிவிப்பை இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் தன்னுடைய சமூக வலைதளத்தில் போஸ்டர் ஒன்றை பகிர்ந்து அறிவித்துள்ளார்.

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்