சென்னை,
இயக்குனர் சி.எஸ்.கார்த்திகேயன் இயக்கத்தில் அசோக் செல்வன் நடித்துள்ள திரைப்படம் 'சபா நாயகன்'. இந்த படத்தில் மேகா ஆகாஷ், கார்த்திகா முரளிதரன், சாந்தினி சவுத்ரி, மயில்சாமி, மைக்கேல் தங்கதுரை, உடுமலை ரவி, அருண் குமார், ஜெய்சீலன் சிவராம், ஸ்ரீராம் கிரிஷ், ஷெர்லின் சேத், விவியாசாந்த், அக்சயா ஹரிஹரன், துளசி சிவமணி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
லியோன் ஜேம்ஸ் இசையமைத்துள்ள இந்த படத்திற்கு பாலசுப்ரமணியம், தினேஷ் புருஷோத்தமன், பிரபு ராகவ் ஒளிப்பதிவு செய்துள்ளனர். கணேஷ் சிவா படத்தொகுப்பு செய்கிறார். சமீபத்தில் இந்த படத்தின் டிரைலர் மற்றும் சில பாடல்கள் வெளியாகி கவனம் ஈர்த்தன.
இந்த நிலையில் இந்த படத்தின் புதிய பாடல் வெளியாகி உள்ளது. அதன்படி, 'சிக்கிக்கிட்டா' என்ற பாடலை படக்குழு வெளியிட்டுள்ளது. கு.கார்த்திக் எழுதியுள்ள இந்த பாடலை லியோன் ஜேம்ஸ் பாடியுள்ளார். இந்த பாடல் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.