சினிமா செய்திகள்

'கண்களால் காண்பதும் பொய், காதால் கேட்பதும் பொய்' - ரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுத்த நடிகை அஷு ரெட்டி

மோதிரம் மாற்றிக்கொள்வது போன்ற புகைப்படங்களை அஷு ரெட்டி பகிர்ந்திருந்தார்.

சென்னை,

சமூக வலைதளங்களில் வைரலாகி வந்த தனது நிச்சயதார்த்தம் குறித்த வதந்திகளுக்கு நடிகை அஷு ரெட்டி விளக்கம் அளித்துள்ளார்.

கடந்த 2 நாட்களுக்கு முன்பு, தான் மோதிரம் மாற்றிக்கொள்வது போன்ற புகைப்படங்களை அஷு ரெட்டி பகிர்ந்திருந்தார். இதனால் அவருக்கு நிச்சயதார்த்தம் முடிந்துவிட்டதாகத் தகவல்கள் பரவின. இதையடுத்து அவருக்கு ரசிகர்கள் வாழ்த்து கூறி வந்தனர்.

இந்நிலையில், அந்தப் புகைப்படங்கள் தனது வரவிருக்கும் “விக்ரம் ஆன் டியூட்டி” (Vikram On Duty) என்ற வெப் சீரிஸிற்காக எடுக்கப்பட்டவை என்று அவர் தற்போது தெளிவுபடுத்தியுள்ளார்.இது தொடர்பாக வர் வெளியிட்டுள்ள பதிவில்,

"நாம் கண்களால் பார்ப்பதும், காதால் கேட்பதும் எப்போதும் உண்மையாக இருக்காது. உண்மையாகத் தோன்றும் அனைத்தும் உண்மையானவை அல்ல... எதையும் நம்புவதற்கு முன் யோசியுங்கள்" என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

அஷு ரெட்டி மீது சமீபத்தில் தொழிலதிபர் ஒருவர் புகார் அளித்திருந்தார். திருமணம் செய்து கொள்வதாகக் கூறி அஷு ரெட்டி தன்னிடம் 9 கோடி ரூபாய்க்கு மேல் பணம் பெற்றதாக அவர் குற்றம் சாட்டியிருந்தார். இந்த வழக்கு தற்போது விசாரணையில் உள்ள நிலையில், இந்த நிச்சயதார்த்தப் புகைப்படங்கள் மேலும் பரபரப்பை ஏற்படுத்தின.

தற்போது அந்தப் படங்கள் வெறும் படப்பிடிப்பிற்காக எடுக்கப்பட்டவை என்று உறுதியாகிவிட்டதால், இந்த வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது.