சினிமா செய்திகள்

சினிமாவில் போட்டியில்லாத ஜீவா

ஜீவா நடித்துள்ள புதிய படம் ‘கொரில்லா.’ இந்த படத்தை டான் சாண்டி இயக்கி உள்ளார். விஜய் ராகவேந்திரா தயாரித்துள்ளார். படத்தின் பாடல் வெளியீட்டு விழா சென்னையில் நடந்தது.

தினத்தந்தி

ஜீவா நடித்துள்ள புதிய படம் கொரில்லா. இந்த படத்தை டான் சாண்டி இயக்கி உள்ளார். விஜய் ராகவேந்திரா தயாரித்துள்ளார். படத்தின் பாடல் வெளியீட்டு விழா சென்னையில் நடந்தது. இதில் நடிகர் ஜீவா கலந்து கொண்டு பேசிய தாவது:-

கொரில்லா படத்தில் குரங்குடன் நடித்தது நல்ல அனுபவம். இந்த குரங்கு ஆங்கில படத்தில் நடித்துள்ளது. குரங்குக்காகவே படப்பிடிப்பை தாய்லாந்தில் நடத்தினோம். குரங்கு என்னுடன் நட்பாகி விட்டது. கொரில்லா மாதிரி ஒரு படத்தில் நடிப்பேன் என்று நினைத்துப் பார்க்கவே இல்லை. இப்படி ஜாலியாக ஒரு படம் பண்ணி ரொம்ப நாட்களாகி விட்டது.

டான் சாண்டி கதையை என்னிடம் சொல்லும் போது ரொம்ப உற்சாகத்தோடு கேட்டேன். படத்திலும் அதே மாதிரி நடித்தேன். நகைச்சுவை மசாலாவை தாண்டி ஒரு நல்ல கருத்தும் படத்தில் இருக்கும். ரொம்ப ஜாலியான படத்தை எடுத்துள்ளோம் இவ்வாறு ஜீவா பேசினார்.

நடிகர் ராதாரவி பேசும்போது, ஜீவாவுக்கு சினிமாவில் யாரும் போட்டி இல்லை. அது பெரியபலம். அவர் அற்புதமான நடிகர். அவரை முதல் படத்தில் இருந்தே பார்த்து வருகிறேன். மனிதர்களை வைத்தே படமெடுப்பது பெரிய கஷ்டம். இவர்கள் மிருகத்தை வைத்து அழகாக எடுத்திருக்கிறார்கள். நான் சில காட்சிகளைப் பார்த்தேன். நன்றாக இருக்கிறது என்றார்.

டைரக்டர்கள் விஜய், கண்ணன், ராஜூமுருகன், நடிகர் சதீஷ், தயாரிப்பாளர்கள் டி.சிவா, ஆர்.பி.சவுத்ரி உள்பட பலர் பேசினர்.

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது