சினிமா செய்திகள்

சினிமாவில் வாரிசுகள் ஜெயிப்பது எளிதல்ல பட விழாவில் பாக்யராஜ் பேச்சு

விக்ரம்பிரபு, மகிமா நம்பியார் ஜோடியாக நடித்துள்ள படம் ‘அசுரகுரு’. இந்த படத்தை ராஜ்கீத் இயக்கி உள்ளார். ஏ.எஸ்.பி.சதீஷ் தயாரித்துள்ளார்.

தினத்தந்தி

படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா சென்னையில் நடந்தது. இதில் டைரக்டர் பாக்யராஜ், எடிட்டர் மோகன் உள்பட பலர் கலந்து கொண்டனர்

விழாவில் பாக்யராஜ் பேசும்போது, விக்ரம் பிரபு முன்னணி கதாநாயகனாக வரவேண்டியவர். என்ன காரணத்தினாலோ அந்த இலக்கை இன்னும் அடையவில்லை. அவர் மேலும் உயரவேண்டும் என்று விரும்புகிறேன். அரசியல் வாரிசுகள் சுலபமாக வந்து விடுகிறார்கள். ஆனால் சினிமாவில் வாரிசுகள் சுலபமாக வெற்றிபெற முடியவில்லை. எனது மகன் சாந்தனு, பாண்டியராஜ் மகன் பிரித்வி ஆகியோரை குறிப்பிட்டுத்தான் இதை நான் பேசுகிறேன் என்றார்.

விழாவில் நடிகை மகிமா நம்பியார் பேசும்போது, அசுரகுரு படத்தில் துப்பறியும் பெண்ணாக வருகிறேன். விக்ரம் பிரபு ஜோடியாக நடித்தது சவுகரியமாக இருந்தது. இந்த படத்துக்காக நான் பைக் ஓட்ட கற்றுக்கொண்டேன். அசுரகுரு சிறந்த பொழுதுபோக்கான ஜனரஞ்சகமான படமாக தயாராகி உள்ளது. மகாமுனி என்ற படத்தில் பத்திரிகை நிருபராக வருகிறேன். தற்போது நான் தபால் மூலம் எம்.ஏ.ஆங்கில இலக்கியம் படித்து வருகிறேன். படித்துக்கொண்டே சினிமாவில் நடிப்பது கஷ்டமாக இல்லை என்றார்.

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது