சினிமா செய்திகள்

பழனி கோவிலில் நடிகர் தனுஷ் சாமி தரிசனம்

புகழ்பெற்ற பழனி கோவிலில் நடிகர் தனுஷ் சாமி தரிசனம் செய்தார். தனுஷ் வந்த தகவல் அறிந்ததும் அவரை காண ரசிகர்கள் திரண்டனர்.

நடிகர் தனுஷ் தனது மனைவி ஐஸ்வர்யா மற்றும் மகனுடன் பழனி முருகன் கோவிலுக்கு சென்றார். அங்கு சிறப்பு பூஜைகள் செய்து பயபக்தியுடன் சாமி கும்பிட்டார். அவருக்கு கோவில் நிர்வாகம் சார்பில் வரவேற்பு அளித்து பிரசாதங்கள் வழங்கப்பட்டன. தனுஷ் வந்த தகவல் அறிந்ததும் அவரை காண ரசிகர்கள் திரண்டனர்.

தனுசுடன் கைகுலுக்கவும் புகைப்படம் எடுத்துக் கொள்ளவும் முண்டியடித்தனர். இதனால் கோவில் பகுதியில் நெரிசலும் தள்ளுமுள்ளும் ஏற்பட்டது. போலீசார் ரசிகர்களை அப்புறப்படுத்தி தனுசை பாதுகாப்பாக அழைத்துச் சென்றனர். தனுஷ் தற்போது கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் சுருளி படத்தில் நடித்து வருகிறார்.

இதன் படப்பிடிப்பு பழனி அருகே உள்ள கோம்பைப்பட்டியில் நடந்து வருகிறது. படப்பிடிப்புக்கு இடையில் பழனி கோவிலுக்கு சென்று அவர் சாமி கும்பிட்டார். தனுசுடன் சுருளி படக்குழுவினரும் சென்றனர். தனுஷ் நடித்துள்ள பட்டாஸ் படம் பொங்கலுக்கு திரைக்கு வருகிறது.

இதில் நாயகியாக மெஹ்ரீன் மற்றும் நாசர், முனிஷ்காந்த், நவீன் சந்திரா ஆகியோரும் நடித்துள்ளனர். துரை செந்தில்குமார் இயக்கி உள்ளார். அசுரன் படம் இந்த வருடம் தனுசுக்கு பெரிய வெற்றிபடமாக அமைந்தது. இதில் அவரது நடிப்புக்கும் பாராட்டுகள் கிடைத்தன. இந்த படத்தை பிற மொழிகளிலும் ரீமேக் செய்கிறார்கள்.

79-வது நினைவு தினம்: மகாத்மா காந்தி நினைவிடத்தில் ஜனாதிபதி, பிரதமர் மோடி அஞ்சலி

பெண் விமானிகள் குறித்து அஜித் பவார் வெளியிட்ட பழைய பதிவு வைரல்

இனி சில்லறை பிரச்சினை வராது.. ஏடிஎம்களில் விரைவில் 10, 50 ரூபாய் நோட்டுகள்?

கடந்த ஆண்டில் 18 ஆயிரம் முகாம்கள் மூலம் 2.22 கோடி பேருக்கு வேலை - மத்திய அரசு தகவல்

இபிஎப்ஓ சம்பள உச்சவரம்பு ரூ.25,000 ஆக உயர்கிறதா?