சினிமா செய்திகள்

அதர்வா நடித்துள்ள 'டிரிக்கர்' படத்தின் டீசர் வெளியானது..!

நடிகர் அதர்வா நடித்துள்ள 'டிரிக்கர்' திரைப்படத்தின் டீசர் வெளியாகி உள்ளது.

தினத்தந்தி

சென்னை,

இயக்குனர் சாம் ஆண்டன் இயக்கத்தில் நடிகர் அதர்வா நடித்துள்ள திரைப்படம் 'டிரிக்கர்'. இந்த படத்தில் அதர்வாவுக்கு ஜோடியாக நடிகை தான்யா ரவிச்சந்திரன் நடித்துள்ளார். மேலும் இந்த படத்தில் அருண் பாண்டியன், சீதா, முனீஸ்காந்த், சின்னி ஜெயந்த், அறந்தாங்கி நிஷா, அன்புதாசன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

பிரமோத் பிலிம்ஸ் தயாரித்துள்ள இந்த திரைப்படத்திற்கு ஜிப்ரான் இசையமைத்துள்ளார். ரூபன் படத்தொகுப்பு செய்துள்ளார். மேலும் கிருஷ்ணன் வசந்த் இந்த படத்திற்கு ஒளிப்பதிவு செய்துள்ளார்.

'டிரிக்கர்' திரைப்படம் ஆக்சன் திரில்லர் ஜானரில் உருவாகியுள்ளது. இந்த நிலையில் இந்த படத்தின் டீசர் தற்போது வெளியாகியுள்ளது. இந்த டீசர் தற்போது சமூக வலைதளத்தில் ரசிகர்களின் கவனம் ஈர்த்து வருகிறது.

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்