Image Courtesy : @officialavatar twitter 
சினிமா செய்திகள்

உலகம் முழுவதும் 52 ஆயிரம் திரையரங்குகளில் ரிலீசாகும் அவதார் 2 - வசூலில் சாதனை படைக்கும் என எதிர்பார்ப்பு

உலகம் முழுவதும் சுமார் 52 ஆயிரம் திரையரங்குகளில் மொத்தம் 160 மொழிகளில் அவதார்-2 திரைப்படம் வெளியாக உள்ளது.

தினத்தந்தி

புதுடெல்லி,

ஜேம்ஸ் கேமரூன் இயக்கத்தில் பிரம்மாண்ட பொருட்செலவில் உருவாகி இருக்கும் 'அவதார்-2: தி வே ஆஃப் வாட்டர்' வரும் 16-ந்தேதி(நாளை) உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இந்த படத்தின் சிறப்பு முன்னோட்ட காட்சிகளை பார்த்தவர்கள், பிரம்மிப்பை ஏற்படுத்தக் கூடிய வகையில் காட்சியமைப்புகள் இருப்பதாக தெரிவித்துள்ளனர்.

இந்த திரைப்படம் உலகம் முழுவதும் சுமார் 52 ஆயிரம் திரையரங்குகளில் மொத்தம் 160 மொழிகளில் வெளியாக உள்ளது. இந்தியாவைப் பொறுத்தவரை தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம், மலையாளம், ஆங்கிலம் உள்ளிட்ட மொழிகளில் அவதார் 2 வெளியாகிறது. 

இந்தியாவில் சமீபத்தில் அவதார் 2 படத்திற்கான முன்பதிவு தொடங்கிய நிலையில், இதுவரை சுமார் 10 கோடி ரூபாய்க்கு மேலாக டிக்கெட் விற்பனை நடைபெற்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த படம் சர்வதேச அளவில் பல்வேறு வசூல் சாதனைகளை நிகழ்த்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்