சினிமா செய்திகள்

அவதார் 2-ம் பாகம் படப்பிடிப்பு முடிந்தது

அவதார் 2-ம் பாகம் முழு படப்பிடிப்பும் முடிந்து விட்டது.

தினத்தந்தி

ஜேம்ஸ் கேமரூன் இயக்கத்தில் 2009-ல் திரைக்கு வந்து உலகையே திரும்பி பார்க்க வைத்த அவதார் படம் சுமார் ரூ.25 ஆயிரம் கோடி வசூலித்து சாதனை நிகழ்த்தியது. படத்தில் இடம்பெற்ற கற்பனை உலகமும் கிராபிக்ஸ் தொழில் நுட்பங்களும் ரசிகர்களை வியக்க வைத்தன. அடுத்து இந்த படத்தின் 4 பாகங்கள் ரூ.7,500 கோடி செலவில் தயாராக உள்ளன. 2 மற்றும் 3-ம் பாகங்களுக்கான படப்பிடிப்புகள் நியூசிலாந்தில் நடந்து வந்தன. கொரோனா பரவலால் கடந்த மார்ச் மாதம் படப்பிடிப்பை நிறுத்தினர். பாதுகாப்பு அம்சங்களுடன் ஜூன் மாதம் நியூசிலாந்தில் மீண்டும் படப்பிடிப்பை தொடங்கினர். தற்போது அவதார் 2-ம் பாகத்தின் முழு படப்பிடிப்பும் முடிந்து விட்டது.

இதுகுறித்து இயக்குனர் ஜேம்ஸ் கேமரூன் கூறும்போது, நாங்களும் கொரோனா பாதிப்பில் சிக்கினோம். இதனால் பல மாதங்கள் தாமதம் ஏற்பட்டது. படம் திரைக்கு வருவதும் ஒரு வருடத்துக்கு ஒத்தி வைக்கப்பட்டது. தற்போது அவதார் 2 படப்பிடிப்பு முடிந்து விட்டது. அவதார் 3-ம் பாகத்துக்கான படப்பிடிப்பையும் 95 சதவீதம் முடித்து விட்டோம். என்றார். இது ரசிகர்களை சந்தோஷப்படுத்தி உள்ளது. அவதார் 2 படம் அடுத்த வருடம் டிசம்பர் மாதம் திரைக்கு வருகிறது.

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது