சினிமா செய்திகள்

அயோத்யா திரைப்பட விழா: மகாமுனி திரைப்படத்திற்காக ஆர்யாவிற்கு சிறந்த நடிகருக்கான விருது

அயோத்யா திரைப்பட விழாவில் மகாமுனி திரைப்படத்திற்காக நடிகர் ஆர்யாவிற்கு சிறந்த நடிகருக்கான விருது வழங்கப்பட்டுள்ளது.

தினத்தந்தி

சென்னை, 

டைரக்டர் சாந்தகுமார் இயக்கத்தில் நடிகர் ஆர்யா நடித்து 2019-ல் வெளியான திரைப்படம் 'மகாமுனி'. திகில் கதையம்சம் கொண்ட படமாக தயாராகி இருந்த மகாமுனி திரைப்படம் வசூல் மற்றும் விமர்சனம் ரீதியாக நல்ல வரவேற்பை பெற்றது. 

இந்த படம் ஏற்கெனவே பல சர்வதேச திரைப்பட விழாக்களில் திரையிடப்பட்டு விருதுகளை வென்றுள்ளது. மகிமா நம்பியாருக்கு மேட்ரிக் சர்வதேச திரைப்பட விழாவில் சிறந்த துணை நடிகைக்கான விருது கிடைத்தது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் தற்போது,  15-வது அயோத்யா திரைப்பட விழாவில் மகாமுனி திரைப்படத்தில் நடித்ததற்காக சிறந்த நடிகருக்கான விருது ஆர்யாவிற்கு கிடைத்துள்ளது.

இதுகுறித்து நடிகர் ஆர்யா, தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில், 'அயோத்யா திரைப்பட விழாவின் 15வது ஆண்டு விழாவில் மகாமுனி திரைப்படத்திற்காக சிறந்த நடிகருக்கான விருது பெற்றதில் மிகுந்த மகிழ்ச்சி. டைரக்டர் சாந்தகுமார், இசையமைப்பாளர் தமன் மற்றும் ஸ்டுடியோ கிரீன் நிறுவனத்திற்கு என்னுடைய நன்றிகள்' என பதிவிட்டுள்ளார்.

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்