சினிமா செய்திகள்

'பாகுபலி 3-ம் பாகம் கண்டிப்பாக வரும்' - இயக்குனர் ராஜமவுலி

'பாகுபலி என் மனதில் இடம்பெற்ற முக்கியமான படம்' என்று இயக்குனர் ராஜமவுலி கூறினார்.

தினத்தந்தி

சென்னை,

ராஜமவுலி இயக்கத்தில் பிரபாஸ், அனுஷ்கா, ராணா, ரம்யா கிருஷ்ணன், சத்யராஜ் உள்ளிட்ட பலர் நடிப்பில் கடந்த 2015-ம் ஆண்டு வெளியாகி பெரும் வரவேற்பைப் பெற்ற படம் பாகுபலி. தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் வெளியான இப்படம், உலக அளவில் ரூ.600 கோடியைக் கடந்ததாக தகவல் வெளியானது. இதையடுத்து இப்படத்தின் இரண்டாம் பாகம் 2017-ம் ஆண்டு வெளியாகி முதல் பாகத்தை விட அதிக வசூல் ஈட்டியது. உலகமுழுவதும் ரூ.1,000 கோடிக்கு மேல் வசூலித்து சாதனை படைத்தது.

அதனைத்தொடர்ந்து பாகுபலி படத்தின் 3-ம் பாகத்தையும் உருவாக்க வேண்டும் என்று ரசிகர்கள் தொடர்ந்து விருப்பம் தெரிவித்து வருகிறார்கள்.

இது குறித்து பிரபாஸ் கூறியதாவது, ''பாகுபலி 3-ம் பாகம் எடுப்பது எனது கையில் இல்லை. அது டைரக்டர் ராஜமவுலி கையில் இருக்கிறது. பாகுபலி எப்போதும் எனது இதயத்துக்கு நெருக்கமாக இருக்கும்' என்றார்.

இந்த நிலையில் ஐதராபாத்தில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட இயக்குனர் ராஜமவுலி பாகுபலி 3-ம் பாகம் வருமா? என்ற கேள்விக்கு பதில் அளித்து கூறும்போது, '' பாகுபலி என் மனதில் இடம்பெற்ற முக்கியமான படம். இந்த படத்தின் 3-ம் பாகம் வருமா? என்று கேட்கிறார்கள். பாகுபலி 3-ம் பாகம் கண்டிப்பாக உருவாகும். இதுகுறித்து பிரபாசிடம் பேச்சுவார்த்தை நடந்து வருகிறது'' என்றார்.

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து

ஜன.30-ல் மேற்கு வங்காளம் செல்கிறார் அமித்ஷா

2047-ம் ஆண்டிற்குள் இந்தியாவில் 400 விமான நிலையங்கள்: பிரதமர் மோடி

7 முறை எம்.எல்.ஏ... அஜித் பவாரின் குடும்ப, அரசியல் வாழ்க்கை விவரம் வெளியீடு