சினிமா செய்திகள்

சிவகார்த்திகேயனின் 26-வது படம்...கதாநாயகி இவரா?

இப்படத்தை வெங்கட் பிரபு இயக்க உள்ளார்.

சென்னை,

பராசக்தி படத்தின் வெற்றியை தொடர்ந்து சிவகார்த்திகேயன் அடுத்து தனது 26-வது படத்திற்கு தயாராகி வருகிறார். இப்படத்தை வெங்கட் பிரபு இயக்க உள்ளார். விரைவில் இது குறித்த அதிகாரபூர்வ அறுவிப்பு வெளியாக உள்ளது.

இந்நிலையில், நடிகை பாக்யஸ்ரீ போர்ஸ் இப்படத்தில் கதாநாயகியாக நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது. ‘காந்தா’ திரைப்படத்தின் மூலம் ரசிகர்களை கவர்ந்த இவர், தற்போது சிவகார்த்திகேயன் நடிக்கவுள்ள ‘எஸ்கே26’ படத்தில் இணைய உள்ளதாக கூறப்படுகிறது.

பாக்யஸ்ரீ போர்ஸ், இந்தி படங்களான ’யாரியான் 2’ (2023) மற்றும் சந்து ஜாம்பியன் (2024) ஆகியவற்றில் சிறிய வேடங்களில் நடித்து சினிமாவில் அறிமுகமானார். பின்னர் தெலுங்கு திரைப்படமான ’மிஸ்டர் பச்சான்’ மூலம் கதாநாயகியாக அறிமுகமானார்.

விஜய் தேவரகொண்டாவுடன் ’கிங்டம்’, ராம் பொதினேனியுடன் 'ஆந்திரா கிங் தாலுகா' ஆகிய படங்களில் நடித்தார். இந்நிலையில், ‘எஸ்கே26’ படத்தில் அவர் இணைவாரா? என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே அதிகரித்துள்ளது.

SCROLL FOR NEXT