சினிமா செய்திகள்

பார்த்திபனை பாராட்டிய பாரதிராஜா ‘ஒத்த செருப்பு’ படத்துக்கு விருது

பார்த்திபன் மட்டுமே நடித்து தயாரித்து இயக்கி உள்ள படம் ‘ஒத்த செருப்பு.’

இந்த படத்துக்கு ஆசிய சாதனைக்கான விருது மற்றும் சான்றிதழ் கிடைத்து உள்ளது. விருது வழங்கும் விழா சென்னையில் நடந்தது. இதில் இயக்குனர் பாரதிராஜா கலந்து கொண்டு பேசியதாவது:-

ஒத்த செருப்பு படத்தை பார்த்துவிட்டு அதில் இருந்து வெளியே வர முடியவில்லை. தனி ஒரு ஆள் மட்டும் கால் மணி நேரமோ அரை மணி நேரமோ நடிக்கலாம். ஆனால் சுமார் ஒன்றே முக்கால் மணி நேரம் முழு படத்திலும் தோன்றுவதெல்லாம் விளையாட்டு விஷயமில்லை. அதையும் மிக அற்புதமாக செய்திருக்கிறார் பார்த்திபன்.

யார் வேண்டுமானாலும் நடிக்கலாம் என்று சொல்லும் நானே, புதிய பாதையில் பார்த்திபன் நாயகனாக நடிக்கிறார் என்பது தெரிந்ததும் அதிர்ச்சியடைந்தேன். புதிய பாதையில் தன்னை நிரூபித்த பார்த்திபன் இன்று நடிப்பில் புதிய பரிமாணங்களைத் தொட்டு இருக்கிறார். ஒத்த செருப்பு படம் மூலம் உலகத்தையே தமிழ்ப்படங்கள் பக்கம் திரும்பிப் பார்க்க வைத்திருக்கிறார். இவ்வாறு பாரதிராஜா பேசினார்.

இயக்குனர் பார்த்திபன் பேசும்போது, படம் பார்த்துவிட்டு மக்கள் சொல்லும் தீர்ப்பைத்தான் நான் பெரிதாக கருதுகிறேன் என்றார்.

இயக்குனர்கள் பாக்யராஜ், சமுத்திரக்கனி, ஒளிப்பதிவாளர் ராம்ஜி, சென்னை சர்வதேச திரைப்பட விழாத் தலைவர் ஈ.தங்கராஜ், விவேக் ஆகியோர் கலந்து கொண்டனர்.

கடந்த ஆண்டில் 18 ஆயிரம் முகாம்கள் மூலம் 2.22 கோடி பேருக்கு வேலை - மத்திய அரசு தகவல்

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...