சினிமா செய்திகள்

டிம்பிள் ஹயாதியின் புதிய படம்...2-வது பாடல் வெளியீடு

இப்படம் அடுத்த ஆண்டு பொங்கலுக்கு வெளியாக தயாராகி வருகிறது.

தினத்தந்தி

சென்னை,

நடிகர் ரவி தேஜா கடைசியாக பானு போகவரபு இயக்கிய மாஸ் ஜதாராவில் நடித்தார். அந்தப் படம் பலரும் எதிர்பார்த்த அளவுக்கு வெற்றி பெறவில்லை, இப்போது அவர் தனது முழு கவனத்தையும் இயக்குனர் கிஷோர் திருமலா இயக்கும் தனது அடுத்த படமான பாரத மகாசாயுலகு விக்ஞாப்தி செலுத்தியுள்ளார்.

இப்படத்தில் அவருக்கு ஜோடியாக ஆஷிகா ரங்கநாத் மற்றும் டிம்பிள் ஹயாதி ஆகியோர் நடிக்கிறார்கள். இந்த படத்தை சுதாகர் செருகுரி தயாரிக்க பீம்ஸ் செசிரோலியோ இசையமைக்கிறார். இப்படம் அடுத்த ஆண்டு பொங்கலுக்கு வெளியாக தயாராகி வருகிறது.

சமீபத்தில், இப்படத்தின் முதல் பாடலான பெல்லா பெல்லா வெளியாகி கவனம் பெற்றது. இதில் ரவி தேஜாவுடன் நடிகை ஆஷிகா நடனமாடி இருந்தார். இந்நிலையில், இப்படத்தின் 2-வது பாடல் வெளியாகி இருக்கிறது. இதில் ரவி தேஜாவுடன் டிம்பிள் ஹயாதி நடனமாடி இருக்கிறார்.

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்