சினிமா செய்திகள்

மீண்டும் தமிழில் நடிக்கிறார் பூமிகா..!

உதயநிதி ஸ்டாலினின் புதிய படத்தின் மூலம் நடிகை பூமிகா மீண்டும் தமிழில் நடிக்கிறார்.

தினத்தந்தி

சென்னை,

'பத்ரி' திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமான பூமிகா சாவ்லா நீண்ட இடைவெளிக்குப் பிறகு மீண்டும் கோலிவுட்டில் நடிக்கிறார். பூமிகா, உதயநிதி ஸ்டாலினுடன் இணைந்து 'கண்ணை நம்பாதே' படத்தின் மூலம் மீண்டும் தமிழ் படத்தில் நடிக்க இருக்கிறார்.

இந்த திரைப்படத்தில் பூமிகா மிக முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். கண்ணை நம்பாதே திரைப்படத்தின் படப்பிடிப்பு சென்னையில் நடைபெற்று வருகிறது. பூமிகா சமீபத்தில் 'சீதிமார்', 'பாகல்' ஆகிய தெலுங்கு படங்களில் நடித்திருந்தார்.

சமீபத்தில் பூமிகா அளித்த பேட்டி ஒன்றில், கடந்த 20 ஆண்டுகளாக ஒரே மாதிரியான கதாபாத்திரங்களில் மீண்டும் மீண்டும் நடித்ததால் சலிப்படைந்ததாகவும், வித்தியாசமான ஒன்றை முயற்சிப்பதற்காக எதிர்மறையான பாத்திரத்தை முயற்சிக்க தயாராக இருப்பதாகவும் கூறினார். மேலும் பல்வேறு பரிமாணங்களில் நடிக்க ஆவலுடன் இருப்பதாக அவர் கூறினார்.

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு