பெரிய பட நிறுவனம் தயாரிக்கிறது: “சந்திரமுகி-2’ படம் விரைவில் உருவாகும்” - பி.வாசு பேட்டி
சந்திரமுகி-2 படம் விரைவில் உருவாக உள்ளதாகவும், பெரிய பட நிறுவனம் ஒன்று தயாரிக்க உள்ளதாகவும் பி.வாசு தெரிவித்துள்ளார்.
தினத்தந்தி
ரஜினிகாந்த் நடித்து, பி.வாசு டைரக்ஷனில் வெளிவந்து, மிகப்பெரிய வெற்றி பெற்ற படம், சந்திரமுகி. சிவாஜி புரொடக்ஷன்ஸ் தயாரித்து இருந்தது. படம், சென்னை சாந்தி தியேட்டரில் 800 நாட்களை தாண்டி ஓடி, சாதனை புரிந்தது.