தற்போது நடிகர் பிரதீப் ஆண்டனி ஒரு மகிழ்ச்சியான செய்தி ஒன்றை தெரிவித்துள்ளார். அவருக்கு நேற்றைய தினம் திருமண நிச்சயதார்த்தம் நடந்து முடிந்துள்ளது. தன்னுடைய நீண்ட நாள் காதலியை திருமணம் செய்து கொள்ள உள்ளார். நேற்று நடந்து முடிந்த இந்த திருமண நிச்சயதார்த்த விழாவில் நெருங்கிய நண்பர்கள் மற்றும் உறவினர்கள் மட்டுமே கலந்து கொண்டுள்ளனர்.
தன்னுடைய நிச்சயதார்த்த புகைப்படம் ஒன்றை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து "பேமிலி மேன். எனக்கெல்லாம் நடக்காதுன்னு நினச்சேன். பரவாயில்லை பொண்ணு கொடுக்குறாங்க என்னை நம்பி. 90ஸ் கிட்ஸ் சாதனைகள்" என கேப்ஷன் ஒன்றையும் பகிர்ந்துள்ளார். அவரின் இந்த போஸ்டுக்கு லைக்ஸ்களும் வாழ்த்துக்களும் குவிந்து வருகின்றன. விரைவில் திருமண நாள் குறித்த அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
பிரதீப் ஆண்டனியின் நண்பரும் நடிகருமான கவின் நடிப்பில் வெளியாகி நல்ல விமர்சனங்களை பெற்ற 'டாடா' படத்தில் ஒரு சிறிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் பிரதீப் ஆண்டனி.
View this post on Instagram