இந்த நிலையில் ஆதிபுருஷ், ஸ்பிரிட் படங்களுக்கு பிரபாசுக்கு ரூ.150 கோடி சம்பளம் பேசி இருப்பதாக தகவல் வெளியாகி திரையுலகில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதுவரை அதிக சம்பளம் பெறும் இந்திய நடிகர்கள் பட்டியலில் சல்மான்கான், அக் ஷய்குமார் ஆகியோர் இருந்தனர். அவர்கள் ஒரு படத்துக்கு ரூ.100 கோடி வாங்கியதாக கூறப்பட்டது. கடந்த 10 வருடங்களாக இவர்கள் சம்பளத்தை யாரும் முந்தாத நிலையில் இப்போது பிரபாஸ் இருவரையும் பின்னுக்கு தள்ளி இருக்கிறார்.
ஆதிபுருஷ் படம் ராமாயண கதையை மையமாக வைத்து தயாராகிறது. இதில் பிரபாஸ் ராமராகவும், சயீப் அலிகான் ராவணனாகவும் நடிக்கின்றனர். கிரிதி சனோன் சீதையாக வருகிறார். ஓம் ரவுத் இயக்குகிறார். இந்த படம் தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னட மொழிகளில் அடுத்த வருடம் ஆகஸ்டு மாதம் வெளியாகிறது.