சினிமா செய்திகள்

பைக் விபத்தில் உயிர் தப்பிய ஸ்ரீபிரியங்கா

தமிழ் திரையுலகில் வளரும் இளம் நடிகை ஸ்ரீபிரியங்கா. இவர் நிலா மீது காதல், கங்காரு, பிச்சுவா கத்தி, ஸ்கெட்ச் ஆகிய படங்களில் நடித்துள்ளார்.

தினத்தந்தி

மிக மிக அவசரம் என்ற படத்தில் பெண் போலீசாக நடித்து இருக்கிறார். இந்த படம் விரைவில் திரைக்கு வர உள்ளது. இதில் விருதுக்குரிய நடிப்பை வெளிப்படுத்தி இருப்பதாக முக்கிய இயக்குனர்கள் பாராட்டி உள்ளனர்.

தற்போது கங்கனம் என்ற படத்தில் முக்கிய வேடத்தில் நடித்து வருகிறார். இதன் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இந்த படத்துக்காக ஸ்ரீபிரியங்கா பைக் ஓட்டுவதுபோன்ற காட்சியை படமாக்கினர். முன்னால் ஒரு கார் செல்ல அதன் பின்னால் ஸ்ரீபிரியங்கா வேகமாக பைக் ஓட்டி செல்வதுபோல் காட்சியை படமாக்கிக்கொண்டிருந்தனர்.

அப்போது திடீரென்று கார் நின்றுவிட்டது. இதனால் பின்னால் பைக்கில் வந்த ஸ்ரீபிரியங்கா பைக் வேகத்தை கட்டுப்படுத்த முடியாமல் தடுமாறினார். இதை பார்த்து படக்குழுவினர் பதறினர்.

காரில் மோதாமல் நிறுத்த முயன்று பைக்கோடு கீழே விழுந்தார். இதில் ஸ்ரீபிரியங்கா காயம் இல்லாமல் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்.

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்