சினிமா செய்திகள்

நடிகை பிபாசா பாசுவுக்கு பெண் குழந்தை பிறந்தது

பிரபல நடிகை பிபாசா பாசு, கரண் சிங் குரோவர் தம்பதிக்கு பெண்குழந்தை பிறந்துள்ளது.

தினத்தந்தி

புதுடெல்லி,

பிரபல இந்தி நடிகை பிபாசா பாசு. இவருக்கு 43 வயது ஆகிறது. தமிழில் விஜய்யுடன் சச்சின் படத்தில் நடித்துள்ளார். தெலுங்கு படங்களிலும் நடித்து இருக்கிறார். முன்னணி கதாநாயகர்கள் படங்களில் ஒரு பாடலுக்கு கவர்ச்சி நடனமும் ஆடி இருக்கிறார். 

நடிகை பிபாசா பாசு, கரண் சிங் குரோவர் தம்பதிக்கு பெண்குழந்தை பிறந்துள்ளது. 'அலோன்' திரைப்படத்தில் நடிக்குபோது பிபாசா பாசு, கரண் சிங் குரோவருக்கு இடையே காதல் மலர்ந்தது. கடந்த 2016-ம் ஆண்டு  முறைப்படி இருவரும் திருமணம் செய்துகொண்டனர். திருமணத்திற்கு பின் 'டேஞ்சரஸ்' என்ற வெப் தொடரில் தம்பதிகள் இருவரும் இணைந்து நடித்தனர்.

இதனையடுத்து, கடந்த ஆகஸ்ட் மாதம் பிபாசா பாசு கர்ப்பமாக இருப்பதை தனது இன்ஸ்டகிராமில் அறிவித்தார். அதன்பிறகு அது தொடர்பான சில புகைப்படங்களையும் வீடியோக்களையும் வெளியிட்டு வந்தார்.

இந்த நிலையில், நடிகை பிபாசா பாசுவிற்கு இன்று பெண் குழந்தை பிறந்தது.

நடிகர் கரண் சிங் குரோவர் - நடிகை பிபாசா பாசு தம்பதிக்கு பெண் குழந்தை பிறந்துள்ள நிலையில் தம்பதிக்கு திரைத்துறையினர், ரசிகர்கள் உள்பட பலர் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து

ஜன.30-ல் மேற்கு வங்காளம் செல்கிறார் அமித்ஷா

2047-ம் ஆண்டிற்குள் இந்தியாவில் 400 விமான நிலையங்கள்: பிரதமர் மோடி

7 முறை எம்.எல்.ஏ... அஜித் பவாரின் குடும்ப, அரசியல் வாழ்க்கை விவரம் வெளியீடு