சினிமா செய்திகள்

கொதிக்கும் எண்ணெய் தெறித்து: ‘குடும்பஸ்தன்' பட நடிகை காயம்

சென்னையில் நடந்த படப்பிடிப்பின் போது சான்வி மேகனாவின் கையில் எண்ணெய் தெறித்தால் காயமடைந்தார்.

தினத்தந்தி

சென்னை,

ராஜேஷ்வர் காளிசாமி இயக்கத்தில் வெளிவந்த குடும்பஸ்தன்' படத்தில் மணிகண்டன் ஜோடியாக நடித்து கவனம் ஈர்த்தவர் சான்வி மேகனா. குடும்பஸ்தன்' பட வெற்றியை தொடர்ந்து தமிழில் தனது இருப்பை தக்க வைக்க கவர்ச்சி பாதையில் களமிறங்கி இருக்கிறார். அவ்வப்போது தனது கவர்ச்சி படங்களையும் வெளியிட்டு ரசிகர்களை குஷிப்படுத்தியும் வருகிறார்.

இதற்கிடையில் சென்னையில் நடந்த படப்பிடிப்பில் பங்கேற்ற சான்வி மேகனா விபத்தில் சிக்கியுள்ளார். ஒரு சமையல் தொடர்பான காட்சி படமாக்கப்பட்டபோது, கொதிக்கும் எண்ணெய் தெறித்து சான்வி மேகனா கையில் காயத்தை உண்டாக்கியது.

இதையடுத்து சான்வி மேகனா ஆஸ்பத்திரிக்கு சென்று சிகிச்சை மேற்கொண்டார். விபத்துகள் எதிர்பாராத விதமாக நடக்கத்தான் செய்யும். மீண்டு வருவது நம் கையில் தான் இருக்கிறது' என்று அவர் தெரிவித்தார்.

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து