சென்னை,
பாலிவுட் புதுமுக நடிகைகள் டோலிவுட்டில் நடிக்க வரிசையில் நிற்கிறார்கள். ’துரந்தர்’ படத்தின் மூலம் சமீபத்தில் பாலிவுட்டில் அறிமுகமான நடிகை சாரா அர்ஜுன் ஏற்கனவே ’யூபோரியா’ படத்தின் மூலம் தெலுங்கில் அறிமுகமாகியுள்ளார்.
கடந்த ஆண்டு பாலிவுட்டில் அறிமுகமானவர் ராஷா ததானி. ஆசாத் படத்தின் மூலம் அறிமுகமான ராஷா ததானி, தற்போது தெலுங்கில் கால் பதிக்க உள்ளார். மகேஷ் பாபுவின் சகோதரர் ரமேஷின் மகன் ஜெயகிருஷ்ணா ஹீரோவாக அறிமுகமாகும் ஸ்ரீனிவாச மங்காபுரத்தில் ராஷா ததானி கதாநாயகியாக நடிக்கிறார்.
அடுத்ததாக ‘லபடா லேடீஸ்’ மூலம் பிரபலமடைந்த நிதான்ஷி கோயல், டோலிவுட்டில் அடியெடுத்து வைக்கப் போகிறார். ஆனந்த் தேவரகொண்டாவுடன் ’தக்சகுடு’ படத்தில் நிதான்ஷி நடிக்கிறார். இந்தப் படம் நெட்பிளிக்ஸில் ஸ்ட்ரீமிங் ஆக உள்ளது. இந்த பாலிவுட் நடிகைகளில் யார் டோலிவுட் ரசிகர்களை ஈர்ப்பார்கள் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.