சினிமா செய்திகள்

நடிகர்கள் ரஜினிகாந்த், தனுஷ் வீடுகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

சென்னை டி.ஜி.பி அலுவலகத்திற்கு இன்று அதிகாலை மெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல் வந்துள்ளது.

தினத்தந்தி

சென்னை,

நாடு முழுவதும் கடந்த சில மாதங்களாக அரசியல் கட்சித் தலைவர்கள், திரை பிரபலங்கள், பள்ளிகள், விமானங்கள் மற்றும் விமான நிலையங்களுக்கு சமூக ஊடகங்கள் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டு வருகிறது.

அந்த வகையில், சென்னை டி.ஜி.பி அலுவலகத்திற்கு இன்று அதிகாலை மெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல் வந்துள்ளது. அதில் சென்னை போயஸ் கார்டனில் அமைந்து உள்ள நடிகர்கள் ரஜினிகாந்த், தனுஷ் வீடுகளிலும் மற்றும் கீழ்பாக்கத்தில் உள்ள மாநில காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை வீட்டிலும் வெடிகுண்டு வைக்கப்பட்டுள்ளதாக அந்த மெயிலில் குறிப்பிடப்பட்டிருந்தது.

அதன்பேரில், வெடிகுண்டு நிபுணர்கள் மோப்ப நாய்கள் உதவியுடன் சம்மந்தப்பட்ட இடங்களில் சோதனை நடத்தினர். சோதனை செய்ததில் வெடிகுண்டு மிரட்டல் புரளி என தெரியவந்த நிலையில், மிரட்டல் விடுத்த நபர் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்