சினிமா செய்திகள்

திருமணத்துக்கு பிறகு கவர்ச்சியாக நடிக்கலாமா? காஜல் அகர்வால் விளக்கம்

திருமணத்துக்கு பிறகு கவர்ச்சியாக நடிக்க கூடாது என்று எதுவும் இல்லை. இந்த விஷயத்தில் நானும், எனது கணவரும் வெளிப்படையாகவே இருக்கிறோம் என்று காஜல் அகர்வால் விளக்கம் அளித்துள்ளார்.

தினத்தந்தி

தமிழ், தெலுங்கு திரையுலகில் முன்னணி கதாநாயகியாக வலம் வந்த காஜல் அகர்வால் 2020-ல் தொழில் அதிபர் கவுதம் கிச்சலுவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஒரு ஆண் குழந்தை உள்ளது. திருமணத்துக்கு பிறகும் காஜல் அகர்வால் சினிமாவில் தொடர்ந்து நடித்து வருகிறார். தற்போது கமல்ஹாசனின் இந்தியன் 2 படத்தில் நடிக்கிறார்.

இந்த நிலையில் திருமணமான நீங்கள் கவர்ச்சியாக நடிப்பீர்களா? என்று காஜல் அகர்வாலிடம் கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு பதில் அளித்து காஜல் அகர்வால் கூறும்போது, "நடிக்க கூடாது என்று எதுவும் இல்லை. இந்த விஷயத்தில் நானும், எனது கணவரும் வெளிப்படையாகவே இருக்கிறோம். காதல் காட்சிகள் என்றால் சக நடிகருடன் நான் நெருங்கித்தான் நடிக்க வேண்டும். அப்படி நடிக்க மாட்டேன் என்று சொல்ல முடியாது.

திருமண வாழ்க்கையும், செய்யும் தொழிலும் வேறு வேறு. ஆனாலும் கவர்ச்சி காட்சி கதைக்கு தேவையாக இருக்க வேண்டும் என்பது முக்கியம். திருமணத்துக்கு பிறகு நடிக்க மாட்டேன் என்று வதந்தி பரவியது. அதற்கு எனது செயல்கள் மூலம் பதில் அளித்து இருக்கிறேன்'' என்றார்.

View this post on Instagram

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்