சினிமா செய்திகள்

கூட்டத்தில் சிக்கிய ராஷ்மிகாவிடம் அத்துமீறிய ரசிகர்கள்

மும்பையில் உள்ள விநாயகர் கோவிலுக்கு சென்ற ராஷ்மிகாவிடம் ரசிகர்கள் கூட்டத்தில் அத்துமீறினர்.

தினத்தந்தி

தமிழ், தெலுங்கில் முன்னணி கதாநாயகியாக இருக்கும் ராஷ்மிகா மந்தனாவுக்கு பல மொழிகளில் வெளியான புஷ்பா படம் வட மாநிலங்களிலும் பெயர் வாங்கி கொடுத்தது. அந்த படத்தின் இரண்டாம் பாகத்திலும் தற்போது நடிக்கிறார்.

இந்த நிலையில் மும்பையில் உள்ள விநாயகர் கோவிலுக்கு ராஷ்மிகா சாமி கும்பிட சென்று இருந்தார். ராஷ்மிகா வந்த தகவல் அறிந்து ரசிகர்கள் ஏராளமானோர் கோவில் எதிரில் கூடினார்கள். ராஷ்மிகா சாமி கும்பிட்டு விட்டு வெளியே வந்தபோது அவ்வளவு கூட்டத்தை எதிர்பார்க்கவில்லை.

ராஷ்மிகாவை ரசிகர்கள் சூழ்ந்தனர். அவருடன் கைகுலுக்கவும், செல்பி எடுக்கவும் முண்டியடித்தனர். பாதுகாவலர்களால் கூட்டத்தை கட்டுப்படுத்த முடியவில்லை. சிலர் ராஷ்மிகாவின் கையை பிடித்து இழுத்தும் உடலில் தொட்டும் அத்துமீறினர். அவர்களிடம் இருந்து தப்பிக்க ராஷ்மிகா பாதுகாவலர்களுடன் வேகமாக சென்று காரில் ஏறினார். இந்த வீடியோ வலைத்தளத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்