சினிமா செய்திகள்

ராகவா லாரன்ஸ் ஜோடியாக லட்சுமிமேனன்

பி.வாசு இயக்கத்தில் உருவாகும் சந்திரமுகி-2 படத்தில் லாரன்ஸுக்கு ஜோடியாக லட்சுமி மேனன் ஒப்பந்தமாகி இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

தினத்தந்தி

ரஜினிகாந்த் நடிப்பில் பி.வாசு டைரக்ஷனில் கடந்த 2005-ம் ஆண்டு வெளிவந்து மாபெரும் வெற்றியடைந்த படம் 'சந்திரமுகி'. 17 வருடங்களுக்கு பிறகு இப்படத்தின் 2-ம் பாகம் உருவாகிறது.

'சந்திரமுகி-2' படத்தின் கதாநாயகனாக ராகவா லாரன்ஸ் நடிக்கிறார். வடிவேல் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க இருக்கிறார். இப்படத்தின் கதாநாயகி தேர்வு மும்முரமாக நடந்து வந்தது. குறிப்பாக ராஷி கன்னா அல்லது ஆண்ட்ரியா கதாநாயகியாக நடிக்க அதிக வாய்ப்பு இருப்பதாக கூறப்பட்டது. அதேவேளை திரிஷாவுடன் பேச்சுவார்த்தை நடந்ததாகவும் பேசப்பட்டது.

'சந்திரமுகி-2' படத்தில் லட்சுமி மேனன் கதாநாயகியாக தேர்வு செய்யப்பட்டு உள்ளதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது. விரைவில் 'சந்திரமுகி-2' படத்தின் படப் பிடிப்பு பணிகள் தொடங்க இருக்கிறது. முதற்கட்ட படப்பிடிப்பு தமிழகம், ஆந்திரா, கர்நாடகாவில் நடத்தப்பட இருக்கிறது.

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது