சினிமா செய்திகள்

கீர்த்தி சுரேஷ் விரும்பும் கதாபாத்திரங்கள்

நடிகை கீர்த்தி சுரேஷ் தான் விரும்பும் கதாபாத்திரங்கள் குறித்து தெரிவித்துள்ளார்.

தினத்தந்தி

கீர்த்தி சுரேஷ் நடிக்கும் குட்லக் சகி படம் தமிழ், தெலுங்கு, மலையாளம் ஆகிய 3 மொழிகளில் தயாராகி உள்ளது. நாகேஷ் குக்குனூர் இயக்கி உள்ளார். சுதிர் சந்திர பத்ரி, ஷ்ராவ்யா வர்மா ஆகியோர் தயாரித்துள்ளனர். விளையாட்டை பின்னணியாக கொண்ட காதல் படமாக தயாராகி உள்ளது. இந்த படத்தின் டிரெய்லர் இன்று வெளியாகிறது.

இதில் கீர்த்தி சுரேஷ் கிராமத்து பெண்ணாக வருகிறார். கீர்த்தி சுரேஷ் அளித்த பேட்டி வருமாறு:-

நமது சொந்த வாழ்க்கையில் எப்படி இருக்கிறோமோ அதை நெருங்கி இருக்கிற மாதிரியான கதாபாத்திரங்கள் செய்ய மிகவும் சவுகரியமாக இருக்கும். ஆனால் புதிதாக நமது திறமையை வெளிப்படுத்த வாய்ப்புகள் அதில் இருக்காது. என்னுடைய குணாதிசயங்களுக்கு எதிரான கதாபாத்திரங்களில் நான் நடிக்கும்போதுதான் சந்தோஷம் எனக்கு கிடைக்கும். இந்த கதாபாத்திரத்தை சவாலாக செய்தோம் என்ற திருப்தியும் கிடைக்கும். வாழ்க்கையில் நான் மிகவும் மென்மையானவள். திரையில் அதற்கு விரோதமாக காட்சியளிக்க விரும்புகிறேன். எல்லாவிதமான கதாபாத்திரங்களில் நடிக்க வேண்டும் என்பதை லட்சியமாக வைத்து இருக்கிறேன்.

இவ்வாறு கீர்த்தி சுரேஷ் கூறினார்.

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு