சினிமா செய்திகள்

காசோலை மோசடி வழக்கு: சிறை தண்டனையை எதிர்த்து ஐகோர்ட்டில் இயக்குனர் லிங்குசாமி மேல்முறையீடு

சைதாப்பேட்டை கோர்ட்டு பிறப்பித்த உத்தரவை ரத்து செய்யக்கோரி லிங்குசாமி தரப்பில் ஐகோர்ட்டில் மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது.

தினத்தந்தி

சென்னை,

தமிழ் சினிமாவில் முன்னனி இயக்குனர்களில் ஒருவரான லிங்குசாமி. இவர் ஆனந்தம், ரன், சண்டக்கோழி, பையா உள்ளிட்ட பல வெற்றி படங்களை இயக்கி உள்ளார். மேலும் சில படங்களை தயாரித்தும் இருக்கிறார்.

கடந்த 2014-ம் ஆண்டு கார்த்தி, சமந்தா நடிப்பதாக இருந்த 'எண்ணி 7 நாள்' என்ற படத்தை லிங்குசாமியின் திருப்பதி பிரதர்ஸ் தயாரிக்க இருந்தது. இதற்காக பி.வி.பி கேபிட்டல்ஸ் என்ற நிறுவனத்திடம் இருந்து லிங்குசாமியும், அவரது சகோதரர் சுபாஷ் சந்திரபோசும் கடன் பெற்றதாக கூறப்படுகிறது.

அந்த கடன் தொகையை திருப்பி செலுத்த லிங்குசாமி தரப்பு காசோலை கொடுத்ததாகவும், அதை வங்கியில் செலுத்தியபோது பணம் இல்லை என்று திரும்பி வந்ததாகவும் கூறி பி.வி.பி. கேப்பிட்டல்ஸ் நிறுவனம் சைதாப்பேட்டை கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தது.

இந்த வழக்கில் லிங்குசாமி, சுபாஷ் சந்திரபோஸ் ஆகியோருக்கு கோர்ட்டு 6 மாதம் சிறை தண்டனை விதித்தது. இந்நிலையில் இந்த உத்தரவை ரத்து செய்யக்கோரி லிங்குசாமி மற்றும் அவரது சகோதரர் சுபாஷ் சந்திரபோஸ் ஆகியோர் சென்னை ஐகோர்ட்டில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்துள்ளனர்.

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து

ஜன.30-ல் மேற்கு வங்காளம் செல்கிறார் அமித்ஷா

2047-ம் ஆண்டிற்குள் இந்தியாவில் 400 விமான நிலையங்கள்: பிரதமர் மோடி

7 முறை எம்.எல்.ஏ... அஜித் பவாரின் குடும்ப, அரசியல் வாழ்க்கை விவரம் வெளியீடு

காரைக்காலில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை