image courtecy:instagram@mrunalthakur 
சினிமா செய்திகள்

மிருணாள் தாகூரின் வேடிக்கையான ஜிம் வீடியோ - வைரல்

உடற்பயிற்சியில் மிகவும் அக்கறைகொண்டவர் மிருணாள் தாகூர்

தினத்தந்தி

சென்னை,

இந்தி மற்றும் தெலுங்கு படங்களில் நடித்ததன் மூலம் முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வருபவர் நடிகை மிருணாள் தாகூர். சீதா ராமம், ஹாய் நானா, பேமிலி ஸ்டார், லஸ்ட் ஸ்டோரீஸ் போன்ற படங்களில் நடித்ததன் மூலம் ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமானார் என்பது குறிப்பிடத்தக்கது.

உடற்பயிற்சியில் மிகவும் அக்கறைகொண்டவர் மிருணாள் தாகூர். தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மிகவும் ஆக்ட்டிவாக இருக்கும் இவர் அடிக்கடி தனது உடற்பயிற்சி வீடியோ மற்றும் புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார்.

அந்த வகையில் தற்போது அவர் பகிர்ந்துள்ள வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில், அவரது ஜிம் பயிற்சியாளர் எவ்வாறு கண்டிப்பாக இருக்கிறார் என்பது தெரிகிறது. முன்னதாக இவர் பகிர்ந்த கிக் பாக்சிங் வீடியோ இணையத்தில் வைரலானது குறிப்பிடத்தக்கது.

View this post on Instagram

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து

ஜன.30-ல் மேற்கு வங்காளம் செல்கிறார் அமித்ஷா

2047-ம் ஆண்டிற்குள் இந்தியாவில் 400 விமான நிலையங்கள்: பிரதமர் மோடி

7 முறை எம்.எல்.ஏ... அஜித் பவாரின் குடும்ப, அரசியல் வாழ்க்கை விவரம் வெளியீடு